Skip to content
Home » நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

இந்தியா  முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடக்கிறது. இந்தியா முழுவதும் 557 நகரங்களில் இந்த  தேர்வு நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5.20 மணிக்கு முடியும்.  தேர்வு முடிந்த பிறகு தான் மாணவர்கள் வெளியே வர முடியும்.  மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு ஹாலுக்குள் வந்து விட வேண்டும்.

இயற்பியல், வேதியியல், தாபவரவியல்,  விலங்கியல் என 4 பாடங்களில் இருந்தும் தலா 180 மதிப்பெண்களுக்கு(மொத்தம் 720)தேர்வு நடைபெறும். இந்தியா முழுவதும் 24 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் பேரும்  இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.

நீட் தேர்வு எழுதுவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது.  அதன்படி
* நீட்  ஹால் டிக்கெட்களை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.
* இணையம் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு

வண்ண புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.
* மத்திய  அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினல் அட்டை வைத்திருக்க வேண்டும்.
* ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், புகைபடத்துடன் கூடிய ரேஷன் அட்டை அல்லது மத்திய  அரசால் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய இதர வகை அடையாள அட்டை, இவற்றில் ஏதாவது ஒன்று எடுத்து செல்லுதல்.
* நீட் தேர்வு எழுதும் மாற்று திறனாளிகள், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய மாற்று திறனாளிகள் சான்றிதழ்.
* சமீபத்தில் எடுக்கப்பட்ட, பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.
* தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு மையத்திலேயே நீலம், கருப்பு பேனா வழங்கப்படும்.
* விடைகளை எழுதி முடித்த பிறகும் மாணவர்கள் அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை. தேர்வு நேரம் முடியும் வரை தேர்வறையில் அமர்ந்திருக்க வேண்டும்.

தேர்வு அறைக்கு எடுத்து செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள்:

* மோதிரம், வளையல், காதணிகள், மூக்குத்தி, செயின், நெக்லஸ், பதக்கங்கள்.
* அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகித துண்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், அளவுகோல், பென்டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா.
* செல்போன், புளூடூத், இயர்போன்கள், வாட்ச், கேமரா.
* பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்.

ஆடை வழிமுறைகள்
* கை முழுவதும் மூடியநிலையில் உள்ள ஆடைகள் அணியகூடாது. அரை கை கொண்ட லேசான ஆடைகளை அணிய வேண்டும். நீண்ட கை கொண்ட ஆடைகளை அணிவது அனுமதிக்கப்படாது.
* மணிபர்ஸ், கண்ணாடிகள், ஹேர்பேண்ட், தாயத்துகள், பெல்ட், தொப்பி, தாவணி உள்ளிட்டவை அனுமதி இல்லை.
* சம்பிரதாய மற்றும் பாரம்பரிய உடை அணிந்து வருபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும்.
* உயரம் குறைவாக உள்ள செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். ஹீல்ஸ் அணிய கூடாது.
* ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.
* சர்க்கரை நோயாளிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் உரிய அனுமதியுடன் மருந்து, பழம், வெளிப்படையான குடிநீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.
இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகாமை விதித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!