Skip to content
Home » டில்லியில் நாளை ஆர்ப்பாட்டம்…. திருமா., பங்கேற்கிறார்…

டில்லியில் நாளை ஆர்ப்பாட்டம்…. திருமா., பங்கேற்கிறார்…

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

இன்று மாலை வேட்பு மனுவை திரும்ப பெற்று அதனை தொடர்ந்து எத்தனை பேர் போட்டியிடுகிறார் எனவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சுயேச்சை போட்டியிடும் அனைவருக்கும் இன்று சின்னங்கள் வழங்கப்பட உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்திற்கு பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.

விடுதலைக் கட்சியின் சார்பில் நானும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பானை சின்னம் கோரி வந்த நிலையில் வேறு யாரும் இந்த இரண்டு தொகுதிகளும் பானை சின்னம் கேட்கவில்லை என தெரிய வருகிறது எனவே எங்கள் இருவருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன் எந்த சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை.

இன்று மாலை திமுக இளைஞரணி செயலாளர் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி
சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை 6 மணி அளவில் ஜெயங்கொண்டத்திலும் அதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்குடிகளும் வாக்கு சேகரிக்க உள்ளார் நாளை காலை சிதம்பரம் நகரத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

ஏப்ரல் 3ம் தேதி மக்கள் நீதி மையத்தில் நிறுவனரும் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் அரியலூரில் பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சார மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு சிதம்பரம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.

தமிழக முழுவதும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு மக்கள் பேராதரவை வழங்குகின்றனர்.

முதல்வர் செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த முறை 40க்கு 39இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி.

இந்த முறை 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. வட இந்திய மாநிலங்களில், வட கிழக்கு மாநிலங்களில் கூட இந்த முறை இந்தியா கூட்டணி பெரும் வெற்றியை பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள். இந்திய நாட்டு இந்திய நாட்டு மக்களுக்கும் பாரதிய ஜனதாவிற்கும் இடையில் நடக்கின்ற நாட்டில் விடுதலைக்கான இரண்டாம் விடுதலைப் போர் இந்த போரில் மக்கள் வெல்வார்கள் பாரதிய ஜனதா தூக்கி எறியப்படும் என்று நம்புகிறேன்.

இதுவரை இந்திய அரசியல் களத்தில் இது போன்ற வெளிப்படையான நடவடிக்கைகள் ஒரு கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்பட்டதில்லை தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியின் நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என நினைத்து செயல்படுகிறது சின்னம் ஒதுப்பதில் கூட பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு சுடனுக்குடன் சின்னத்தை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அந்த அணிக்கு எதிராக செயல்படு கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க மறுதலித்து ஆணை பிறப்பிக்கிறது விடுதலை சிறுத்தை கட்சிக்கும் அப்படித்தான் நாங்கள் செய்து உங்கள் மாதங்களுக்குப் பிறகும் சின்னம் ஒதுக்க முடியாது என அறிவித்துள்ளது அதற்கு அவர்கள் சொன்ன காரணம் கடந்த முறைநீங்கள் பானு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் நீங்கள் வாக்கு சதவீதம் ஒரு சதவீதத்தை தாண்டவில்லை என்று கூறியுள்ளது ஒரே தொகுதியில் நான் மட்டுமே பானை சின்னத்தில் போட்டி எட்டு வெற்றி பெற்று இருக்கிறேன் பெற்ற வாக்குகள் ஒரு தொகுதி பெற்ற வாக்குகள் 1. 18% தேர்தல் ஆணையத்தில் இணையதளத்திலேயே அது உள்ளது ஆனால் தேர்தல் ஆணையம் நான் ஒரு சதவீதம் கூட வாக்கு பெறவில்லை என்று பொய் சொல்லி சின்னம் தர மறுக்கிறது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நாங்கள் பெற்ற வாக்குகள் ஒரு சதத்திற்கு மேல் என கூறிய பின்னரே தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி திரும்பப் பெற்றார் அந்த ஆணியை திரும்ப பெற்றுக் கொண்ட பிறகு சின்னம் கொடுப்பது குறித்து முடிவெடுக்கு பட வேண்டும் என கூறிய பின்னரும் சொத்தை காரணத்தை கூறி தேர்தல் சின்னத்தை கொடுக்காமல் நிராகரித்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் நேர்மையாக நடக்கவில்லை.
அப்படித்தான் காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கி உள்ளது. நியாயமானது இல்லை நடக்கிறது. எப்படி இந்த தேர்தலை நேர்மையாக நடக்கும் என்பது தெரியவில்லை, EVM தொடர்பான நிர்வாகத்திலும் கூட எவ்வாறு நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்ற கவலையும் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி உள்ளது கைது குறித்து கேள்விக்கு ..

31ம்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜிர்வால் மற்றும் ஹேமந்த் சோரன், மனோஜ் ஆகியோர் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அதில் தான் கலந்து உள்ளேன்.

பாஜகவின் மாநில பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்து வேறு இணைந்துள்ளனர் என்ற கேள்விக்கு..

பாஜக பழங்குடியினர் இனத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது
அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் பேசி வருகிறோம், கடந்த 10 ஆண்டுகளாக இந்த கருத்தை வீதிக்கு வீதி, மேடைக்கு மேடை நான் பேசி வருகிறேன், இன்றைக்கு அதை உணர்ந்து இந்த பட்டியல் அணியின் தலைவர் பாஜகவில் இருந்து வெளியேறுகிறார் என்பது ஆறுதல் அளிக்கிறது.

மீண்டும் சிதம்பர தொகுதியில் இருக்கிறீர்கள் வாக்கு சதவீதத்தில் மாற்றம் இருக்குமா
என்ற கேள்விக்கு

சிதம்பர தொகுதி மக்கள் இந்த முறை என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த தொகுதி என்னுடைய சொந்த தொகுதி நான் திரும்பத் திரும்ப அந்த தொகுதி மக்களை சந்திக்கிற வகையில் இந்த முறையும் போட்டியிடுகிறேன்.

1999 முதல் முதலாக நான் வேட்பாளராக போட்டியிட்ட பொழுது தேர்தல் களத்தில் ஒரு அங்கீகாரம் தந்த தொகுதி அரசியல் சக்தி என்று என்னை அடையாளப்படுத்தி தொகுதி ஆகவே எனது சொந்தத் தொகுதி அவர்களை நம்பி நான் மீண்டும் களம் இறங்கி உள்ளேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி பலத்தோடும், ராகுல் காந்தி அவர்களின் முன்னணியில் உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியில் அதன் மேல் வைத்திருக்கிற நன்மதிப்பு என்ற பலத்தோடு என்னுடைய சொந்த தொகுதி என்ற முறையிலும் மக்கள் என்னை அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மீண்டும் இந்த களத்தில் இறங்கியுள்ளேன் பெருவறையான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது விளிம்பு நிலை மக்களுக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மாநில தலைவர் போராட்டங்கள் தொடர் தொடர்பாக கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் என்ற கேள்விக்கு

பாஜக மாநில தலைவர் மொழி உணர்வை, இன உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக இப்போதல்ல எப்போதும் பேசக்கூடியவர் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் இருந்தபோது தன்னை கர்நாடகாக்காரன் என தமிழ்நாடு பிடிக்காது என கர்நாடகா பிடிக்கும் என பேசியவர் தான் இப்போது தமிழ்நாட்டில் அவர் அரசியல் செய்ய வாய்ப்பு பெற்று இருக்கிறார் சூழலில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அது அவருக்கு தனிப்பட்ட முறையிலேயே விளம்பர தேடித் தருமே தவிர கட்சிக்கு விளம்பரம் தேடித்தராது.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் வாகனங்களை சோதனை செய்கின்றனர் என்ற கேள்விக்கு

தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆளும் கட்சி பாஜகவுக்கு ஆதரவான அமைப்பாக செயல்படுகிறது நான் மீண்டும் சொல்கிறேன்
பாஜக நிரந்தரமாக ஆட்சியை தரப்போவதில்லை. ஆட்சி மாற்றம் நிகழும் தேர்தல் ஆணையம் இது கருத்தில் கொள்ள வேண்டும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றஎப்படி நீதி வழங்குவதற்காக உச்சபட்ச அமைப்பாக இருக்கிறதோ, அதேபோல ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ஒரே உச்சபட்ச அதிகார படைத்த அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது.

தேர்தல் ஆணையம் நேர்மை தவறி நடந்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆளும் கட்சி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் பொழுது இன்னைக்கு வெளிப்படையும் செயல்படுவது எல்லா மக்களுக்கும் தெரிகிறது. இந்த போக்கு கைவிடப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!