Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முல்லை ஆற்றில் குளித்தபோது நேர்ந்த விபரீதம்-13 வயது சிறுவன் மாயம்

கம்பம் சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்றின் ஆழப் பகுதியில் சிக்கிக் கொண்டான்.அவனின் உடலை சுமார் 7 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறுவனின் உடலை தண்ணீரை நிறுத்திவிட்டு விரைவாக மீட்க கோரி பெற்றோர்கள் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளிஅருவி கம்பம் மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்து காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து உடனடியாக தண்ணீரை நிறுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம், இந்த நேரம் பள்ளி குழந்தைகள் சென்றுவரும் நேரம் என்பதால் சாலை மறியலை கைவிடுங்கள் என கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கவைந்து சென்றனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேடும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!