Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்குள்ள பகா கடற்கரையில் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து, தனது செல்போனில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எழும்பிய ஒரு ராட்சத அலையானது, பாறையில் இருந்த மசாலியைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது. கடல் சீற்றம் பயங்கரமாக இருந்ததால் மீட்புக்குழுவினரால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட கடற்கரை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!