உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலையோரப் புதரில் இருந்து திடீரென பாய்ந்த காட்டு மான் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
