Skip to content
Home » திருச்சியில் 182 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…. 3 கடைகளுக்கு சீல்..

திருச்சியில் 182 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…. 3 கடைகளுக்கு சீல்..

  • by Senthil

திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள முருகன் டீ ஸ்டாலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து சுமார் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு விற்பனை செய்த மொத்த விற்பனையாளர் திருவானைக்கோயிலை சேர்ந்த குமார் என்பவரின் கணபதி ஸ்டோரில் 2.8 கிலோ கிராமும், மேலும், இராஜகோபுரம் அருகில் உள்ள இலட்சுமி பீடா ஸ்டாலில் சுமார் 7 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தகவலின் அடிப்படையில் தில்லைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இராமசந்திரன் என்ற நபரிடம் சுமார் 163 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டு ஆக மொத்தம் சுமார் 182 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று கடைகள் சீல் செய்யப்பட்டது..

மேலும், இவர்கள் அனைவரிடமிருந்தும் சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் 9 எடுக்கப்பட்டன.

இவர்கள் அனைவரையும் திருவானைக்கோயில், காந்தி மார்க்கெட், தில்லைநகர் காவல் நிலையங்களில் மேல்நடவடிக்கைக்காக ஐந்து நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு

அலுவலர்கள் உடனிருந்தனர். இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.  புகார் எண் : 99 44 95 95 95 மாநில புகார் எண் : 9444042322 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!