Skip to content
Home » திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

  • by Senthil

திருச்சியில் குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு செய்தல், மாற்றம் செய்தல் தொடர்பாகவும் விண்ணப்பிக்க முடியும்.

மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை விநியோகிக்கும் பொதுவிநியோகத் திட்டம் முறை தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் , விலையில்லாமல் அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெறுகிறார்கள். இதுதவிர அரிசின் உதவி தொகைகள் பெறவும், மகளிர் உரிமை தொகை பெறவும் குடும்ப அட்டைகள் மிக முக்கியமாகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) இருக்கின்றன. இந்த குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் நியாய நிலையில் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.. ரேஷன் கடைகள் மூலம் தமிழ்நாட்டில் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேருக்கு உணவு பொருட்கள் பெறுகிறார்கள்.

தற்போதைய நிலையில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்ய, கைப்பேசி எண் பதிவு செய்ய, புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்க, குடும்ப அட்டையை முகவரி மாற்ற, நகல் அட்டை கேக் ஆன்லைனிலேயே முடியும். ஆனால் ஆன்லைனில் போய் செய்ய முடியாத நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு அவ்வப்போது ரேஷன் குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் பொதுவிநியோகத் திட்டக் குறைபாடுகளைக் களையவும், மக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் திருச்சி மாவட்ட வட்டங்களில் வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

” திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொன்மலைப்பட்டி ரேஷன் கடையிலும், திருச்சி மேற்கு வட்டத்துக்கு ஆா்.எம்.எஸ். காலனி ரேஷன் கடை, திருவெறும்பூா் வட்டத்துக்கு அகரம் 1 ரேஷன் கடை, ரங்கம் வட்டத்துக்கு காவல்காரபாளையம் ரேஷன் கடை, மணப்பாறை வட்டத்துக்கு கரட்டுப்பட்டி ரேஷன் கடை, மருங்காபுரி வட்டத்துக்கு மல்லிகைப்பட்டி ரேஷன் கடை, லால்குடி வட்டத்துக்கு வெள்ளனூா் ரேஷன் கடை, மண்ணச்சநல்லூா் வட்டத்துக்கு கிள்ளியநல்லூா் ரேஷன் கடை, முசிறி வட்டத்துக்கு மேலகொட்டம் (பாப்பாபட்டி) ரேஷன் கடை, துறையூா் வட்டத்துக்கு சி.எம்.எஸ். 3 ரேஷன் கடை, தொட்டியம் வட்டத்தில் மின்னத்தம்பட்டி ரேஷன் கடையிலும் கூட்டம் நடைபெற உள்ளது” என்றார்.

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!