Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி இருந்து வருகிறது.

இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் , சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி ஒருவரை சோதனை செய்ததில் அவரது உடையில் மறைத்து வைத்திருந்த 145.000 கிராம் எடையுள்ள ஒரு தங்கத் கட்டி மற்றும் 90,000 கிராம் எடையுள்ள ஒரு தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 235.000 கிராம், மதிப்பு ரூ. 14,12,820/- ஆகும் மேலும் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த பயனிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!