Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரூ.19.17 லட்சம் மதிப்புள்ள 306 கிராம் 24 ஆயிரம் தங்கத்தை விழுங்கி வயிற்றில் மறைத்து வந்துள்ளார். இதனையடுத்து  அவரது உடலை எக்ஸ்ரே செய்ய திருச்சி GH இல் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்ரேயில் 20 ஓவல் வடிவ பாக்கெட்டுகள் வயிற்றில் மறைத்து விழுங்கப்பட்டது தெரியவந்தது. முறையான மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றி மருத்துவர்களால் மீட்கப்பட்டது. மேலும் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!