Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேட்பாரற்று கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்கள்… திருச்சியில் பரபரப்பு

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத் தடுப்பு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாம் ஆலன் முதல் நிலை காவலர் கண்ணதாசன், காவலர் ராஜ்குமார், ரகு மற்றும் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஆகியோர் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5 ல் வண்டி எண். 22605 புருளியாவில் இருந்து திருநெல்வேலி செல்லும் விரைவு வண்டியில் பின்னால் உள்ள பொதுப் பெட்டி மற்றும் நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 3 சோல்டர் பேக்கை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப் போது சுமார் 2 கிலோ கொண்ட 8 பாக்கெட்டுகள் மொத்தம் 16.645 கிலோகிராம் (மதிப்பு சுமார் 8 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு , திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது

error: Content is protected !!