திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞசை, புதுகை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான இடையிலான வில்வித்தை போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் (10/12/2022,11/12/2022) நடைபெற்றது.
12 கல்லூரிகளிலிருந்து 35க்கும் அதிகாமான மாணவ, மாணவிகள் பங்கேற்ற வில்வித்தை போட்டி இந்தியன் போவ், ரிகர்வ் போவ் காம்பௌன்ட் போவ் ஆகிய பிரிவுகளில் தனி நபர் போட்டிகளும் மற்றும் இந்தியன் போவ் பிரிவில் அணி போட்டியும் நடைபெற்றது.
மாணவர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் மாணவியர்கள் பிரிவில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி அணிகள் முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த அணி சாம்பியன் பட்டத்தை பெற்றன.
மாணவர்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியும், மூன்றாவது இடத்தை செயின்ட் ஜோசப் கல்லூரியும் பிடித்தன.
மாணவியர்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை பிஷப் ஹீபர் கல்லூரியும், மூன்றாவது இடத்தை ஶ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியும் பிடித்தன.
பட விபரம்,: திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஒட்டு மொத்த அணி சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி.