திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டத்திற்குஇளைஞர் அணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜ் வரவேற்றார் கூட்டத்தில் இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜாஸ்ரீ சூர்யா எம் பி தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மாநில இளைஞரணி செயலாளர் நவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும்
மோடியே பிரதமராக கடுமையாக உழைக்க வேண்டும்,அதே போல் பாஜகவின் செயல் திட்டங்களை சாதனைகளை கிராமங்கள் நகரங்கள் தோறும் கொண்டு சென்று மக்களை சந்தித்து அதனை கூறி ஓட்டு கேட்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறினர். இதனை தொடர்ந்து பாஜ., தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது…ஆளுநர் ஆன்லைன் சூதாட்டஉரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு முழுமையாக தீர்வு காணவேண்டும். ஆன்லைன் சூதாட்டம் பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என்று இவ்வாறு தெரிவித்தார்.