Skip to content
Home » திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில்  நேற்று புத்தகத்திருவிழா  தொடங்கியது.  இரண்டாவது ஆண்டாக நடைபெறும்  இந்த புத்தகத் திருவிழாவை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்  திறந்து வைத்து அரங்குகள் தோறும் சென்று என்னென்ன புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்பதை  பார்வையிட்டனர்.

இந்த புத்தகக் கண்காட்சியில் 160-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் ஏராளமான எழுத்தாளர்களின் சிறுவர்களுக்கான புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள்,பண்பாடு  , மரபு சார்ந்த புத்தகங்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றள்ளன. புத்தக திருவிழா கண்காட்சி துவங்கிய முதல் நாளிலேயே புத்தக வாசிப்பாளர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்… புத்தகத் திருவிழாவை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பல்வேறு புத்தகங்களை தேடித் தேடி படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை  கல்வித்துறை  அமைச்சராக வேண்டுகோளாக முன்வைப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்…
புத்தகங்களை வாசிக்கவும், அதனை வாங்கி படிக்கும் ஆர்வமும் அனைவரிடமும் இருக்க வேண்டும், முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்கள் தான்… நாங்கள் கொள்கை பிடிப்புடன் இருக்க காரணமாக அமைந்தது. அதேபோல் மாணவர்களும் தங்கள் அறிவை மேம்படுத்தும் புத்தகங்களை விரும்பி படிக்க வேண்டும் என்றார்.

இந்த கண்காட்சியில் ரூ.10 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என  எதிர்பார்ப்பதாக மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் தெரிவித்தார்.

விழாவில் தூரிகையில் திருச்சி ,  தூய காற்றே எனும் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இந்த கண்காட்சி டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது.  தொடக்க விழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி  மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஐஜி கார்த்திகேயன், டிஐஜி.பகலவன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, இனிகோ இருதயராஜ்  எம்.எல்.ஏ., திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார், ஐஜி கார்த்திகேயன், டிஐஜி.பகலவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!