திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10, மாணவியர் உள்ளிட்ட கல்லூரி ஊழியர்கள் 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இருந்த போதிலும் இந்த விபத்தில் பெண் பேராசிரியை ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.