Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

கேரள மாநிலம் இடுக்கியை  சேர்ந்த  ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும்  இன்று  அதிகாலை   திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம்  சென்னை சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் திருச்சி பைபாஸ் ரோடு கொள்ளிடம்   பாலத்தில் வந்தது. அப்போது காரை ஓட்டிய  ஸ்ரீநாத்  கண் அயர்ந்து விட்டார் என தெரிகிறது. இதனால் கார் அவரது கட்டுபாட்டை இழந்து  தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்குள் விழுந்தது.

இதில் தம்பதி இருவரும் பலியானார்கள். கார்  நொறுங்கியது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சடலங்கள் அந்த இடத்திலேயே கிடந்தது. தகவல் அறிந்ததும்  கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் காரும்   வெளியே எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!