Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

153 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் கூத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு திருவெறும்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 152 பள்ளிகளைச் சேர்ந்த

1061 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சரவணன் பள்ளி வாகனங்களில் ஏறி ஆய்வு மேற்கொண்டதில்
சோதனையில் வாகனங்களில் உள்ள அவசரகால வெளியேறும் வழியை திறக்க சிரமப்பட்டதாலும், ரிவர்ஸ் கியர் செயல்படாமலும், பல வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்

இயங்காமலும், படிகளுக்கு அருகில் தடுப்பு கம்பிகள் இல்லாமலும், ஒரு சில வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்ததும் கண்டறிந்து உடனடியாக வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு குறைகளை பள்ளி திறப்பதற்கு முன்பு சரிசெய்ய உத்தரவிட்டார்.

அவ்வாறு சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பள்ளி வாகனங்கள் இயக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

பள்ளி வாகனத்தை விட்டு அவசரமாக இறங்கும் குழந்தைகள் பள்ளி டயருக்கு அருகில் நிற்க வாய்ப்புள்ளது, அந்த சமயத்தில் ஓட்டுநர்கள் வாகனத்தை வேகமாக இயக்கும்போது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது‌

அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பாளர்கள் நீங்கள் தான். 50 குழந்தைகளின் கனவுகளை சுமந்துகொண்டு செல்லும் “கேர்டேக்கர்கள்” வாகன ஓட்டிகள் தான், அதனால் சாலையையும் கவனிக்க வேண்டும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும், தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், இதனைக் குறைகளாக பார்க்கவேண்டாம், பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளாக பாருங்கள் என அறிவுரை கூறினார்.

error: Content is protected !!