Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில்  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்,  சக்கர நாற்காலிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.  மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்கள் பயன்படுத்துவதற்காக இந்த  சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இன்று இந்த சக்கர நாற்காலிகள் பைல்கள் எடுத்து செல்லும் வண்டிகளாக பயன்படுத்தப்பட்டது.  கலெக்டர் அலுவலக  பிரதான கேட் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து   10க்கும் மேற்பட்ட கோப்புகளை  சக்கர நாற்காலியில் எடுத்து வைத்து

அந்த வண்டியை  முதல் தளத்துக்கு தள்ளிச்சென்றனர்.   மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி டூஇன் ஒன்னாக பயன்படுத்தப்படுவதை  பார்த்த  பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் அதை படம் பிடித்ததால்  அந்த ஊழியர் வேகவேகமாக அதை தள்ளிக்கொண்டு போய்விட்டார். ஊழியர்  எப்படி கொண்டு சென்றால் என்ன?பைல் வேகமாக நகர்ந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!