Skip to content
Home » சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ( Smart City Mission)  குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்குட்பட்ட, சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளானது மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகும். இதில் சில்லறை வியாபாரம் மற்றும் வணிகங்கள் நிறுவனங்கள் அதிக நிறைந்த பகுதிகள் அடங்கும். இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்க வேண்டியுள்ளதால், மாநகராட்சி பொறியாளர்கள். மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு. சிங்காரத்தோப்பு வணிக சங்கத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் 19வது மாமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் முன்னிலையில் 04.03.2023 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் இதுதொடர்பாக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பணியின் அவசர அவசியம் கருதி. வரும் 05.03.2023. 07.03.2023 மற்றும் 08.03.2023 ஆகிய 3 நாட்களில் சிங்காரத் தோப்பு தெருவில் சூப்பர் பஜார் முதல் பெரியகடை வீதி சந்திப்பு வரை உள்ள அனைத்து கடைகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகளை திறக்காமல் இருப்பதற்கு 04.03.2023 அன்று

Driving in Trichy Singarathoppu Road | Tamilnadu Tourists Places  Tiruchirapalli City Tour Mg Travel - YouTube

நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், மேற்கண்ட மூன்று தினங்கள் சாலையை அடைத்து புணரமைக்கும் பணிகள் நடைபெறும் எனவும். பணிகள் முடிந்தவுடன் 09.03.2023 முதல் சாலை திறக்கப்பட்டு வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது, மேலும், இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!