Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கமலா நிகேதன் இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமியின் கமலா நிகேதன் பள்ளியில் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே உரையாற்றினார்.

அஜிங்கியா ரஹானே பேசுகையில் :- சிறிய ஊர்களில் கிரிக்கெட் அகாடமி தொடங்குவதால் சிறந்த வீரர்கள் இதன் வாயிலாக கிடைக்க வாய்ப்புள்ளது, எந்த விளையாட்டு ஆனாலும் அதனை விரும்பி விளையாட வேண்டும்.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது, சிஎஸ்கே அணிக்கு தேர்வானதே மனைவி சொல்லித்தான் தெரிய வந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் ல் ரைசிஸ் புனே சூப்பர்

கிங்ஸ் அணியில் தோனி தலைமையில் விளையாடி இறுதி போட்டி வரை வந்தோம். தற்போது மீண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் நடப்பு ஐபிஎல் தொடரில் நிச்சயம் வெற்றி பெற முயற்சி செய்வோம் என்றார்.

நல்ல மைதானங்கள், உள்கட்ட அமைப்புகள் இருந்தால் சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். மன உறுதி உடல் நலத்துடன் மன உறுதியும் வேண்டும், முதலில் இந்தியாவுக்கு விளையாடுவது என்ற குறிக்கோளுடன் விளையாட வர வேண்டும் அதனைத் தொடர்ந்து ஐபிஎல் க்கு விளையாட வேண்டும் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!