Skip to content
Home » திருச்சி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் இரண்டாவது நாளாக மாணவ மாணவியர்கள் பொங்கல் வைத்து மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவற்றில் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக வந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழாவில் திருச்சி, ராமாபுரம் வளாக சேர்மேன் டாக்டர் சிவக்குமார் பங்கேற்று கல்லூரி மைதானத்தில் அனைத்து கல்லூரி மாணவிகள் தனித் தனியாக பொங்கல் பானையினை விறகு

அடுப்பில் வைத்து பொங்கல் சமையல் செய்தனர். கல்லூரி சேர்மேன் சிவக்குமாரின் இந்த செயலைக் கண்டு மாணவிகள் மட்டுமல்லாது இருபால் பேராசிரியர்களும் வியந்தனர்.

இதனையடுத்து கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கல்லூரி சேர்மன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேராசிரியர்கள் முதல்வர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் ஒன்று திரண்டு சாமி தரிசனம் செய்து மாட்டு வண்டி ,மற்றும் குதிரை வண்டி ,கூட்டு வண்டி ஆகியவற்றில் மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பொங்கல் சமைத்த மைதானத்திற்கு வந்து சமைத்த பொங்கலை இறைவனுக்கு வணங்கி கொண்டாடினர் இதன் பின்னர் மாணவ மாணவிகளின் மயிலாட்டம் ஒயிலாட்டம், கல் தூக்கும் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன.

விழாவில் முதன்மை இயக்குநர் சேதுராமன், இயக்குநர், மால்முருகன், துணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், இருபால் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கண்ணனூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா….

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் தமிழக அரசு சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கலை நிகழ்சியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு சென்னை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பாபு தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் தேவநாதன் மற்றும் உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்கா தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்க்கு வருகை புரிந்த அணைவரையும் வட்டார வளர்சி அலுவலர்கள் வரவேற்றனர். பச்சரிசியால் சக்கரையிட்டு சமைத்த சமத்துவ பொங்கலை

வைத்து வழி வழிபட்டனர் . பின்னர் மாடுகளுக்கு உணவு அளிக்கபட்டது. பொங்கல் விளையட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்மற்றும் சுய உதவிக் குழுவினர்  ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற வீரபத்திரன் மற்றும் . கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுபாஷ் ,பேபி லெனின், சதீஷ். மற்றும் ஊராட்சி தலைவர்கள் நடுவலூர் சுந்தர்ராஜ் சிக்கதம்பூர் சசிகலா கார்த்திகேயன் சொக்கநாதபுரம் செல்வி பாஸ்கர் வீரமச்சம்பட்டி கணேசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!