திருச்சி சீனிவாசா நகர் கனரா பாங்க் காலனி, 3வது கிராசை சேர்ந்தவர் டாக்டர் அருண் குமார். இவர் திருச்சி தில்லைநகர் 10வது கிராசில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் பணியாற்றுகிறார். தீபாவளி விடுமுறைக்காக இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு மதுரைக்கு சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 35 பவுன் தங்க நகைகள், மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளிச்சென்று விட்டனர். திருட்டுப்போன நகை மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்.