Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி……. மறுவாழ்வு மையத்தில் ஷவர் குளியல் போடும் யானைகள்

திருச்சி மாவட்டம்  சிறுகனூர் ஆடத்த எம்.ஆர். பாளையத்தில்   யானைகள் மறுவாழ்வு மையம்  வனத்துறை சார்பில் செயல்பட்டு வருகிறது. இங்கு  11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை  வெயில் சுட்டெரிப்பதால்  யானைகள் குளிக்கவும்,  உடல் உஷ்ணத்தை தணிக்க சேற்றுக்குளியல் போடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

யானைகளுக்கு காலையில்  ஷவர் குளியல்  செய்விக்கப்படுகிறது. அதன்பிறகு  தண்ணீர் சத்துள்ள பழங்கள் கொடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் அங்குள்ள சேற்றில்  விளையாட விடுகிறார்கள்.  இதற்காக பெரிய அளவில் குளம்போல சேறு உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் கொண்டு போய் விடப்பட்டதும் யானைகள் சேற்றில் உருண்டு புரண்டு உடல் வெப்பத்தை தணித்து ஆனந்தமடைகிறது.  இதனால் யானைகள் கோடை வெயிலிலும் குதூகலமாக  பொழுதை கழிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!