Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மருத்துவ அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வு திருச்சி உறையூர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகதுறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு ரூபாய் 50,000 மதிப்பிலான கூடுதல் மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர் இளங்கோ, மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சிவமணி, அமைப்பாளர் கண்ணன், துணை அமைப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!