திருச்சியில் 2 இடங்களில் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு….

115
Spread the love

கத்தி முனையில் பணம் பறித்தவர் சிறையில்: திருச்சி பெரிய மிளகுபாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(24). இவர் விராலிமலை ஜங்ஷன் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கே.கே.நகர் ராஜாராம் சாலையைச் சேர்ந்த உலகநாதன்(35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் இருந்த 700 ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளார். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள உலகநாதன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் அருண்(19). இவர் அங்கு உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது உக்கடையை சேர்ந்த அப்பாஸ்(20) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 200 ரூபாய் பணம் கேட்டுள்ளார். பயந்து ஓட்டம் பிடித்த அருண், இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பாசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருச்சியில் லாட்டரி விற்றவர்கள் கைது – திருச்சி காந்தி மார்க்கெட் அஞ்சுமன் பஜார் பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த காஜாபேட்டையை சேர்ந்த சுந்தர்(62) என்பவரையும், காந்தி சிலை அருகே லாட்டரி விற்றுக்கொண்டிருந்த உறையூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(56) என்பவரையும் காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்றவர் கைது: திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காஜாமலை பகுதியை சேர்ந்த சையது அசிப்(25) என்பவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆதரவற்ற பெண் தற்கொலை: திருவானைக்காவல் அழகிரி புரம் பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் பஞ்சவர்ணம்(59). இவர் ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் என்றாலும் இந்தப் பகுதியில் கடந்த 25 வருடமாக பிச்சை எடுத்து வந்ததினால் அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இந்நிலையில் அவர் திடீரென புதுக்கோட்டைக்கு சென்று எலி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவானைக்காவல் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அலுவலர் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

LEAVE A REPLY