Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பரபரப்பு சம்பவம்..லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24 ந்தேதி மாலை பூச்செடிகளை லாரியில் ஏற்றி வந்து திருச்சி மாவட்டம் வடசேரி பகுதியில் உள்ள ஒரு பூச்செடி விற்பனை கடையில் இறக்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் மது குடித்தார். அப்போது அவர் இணைய வழி டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு நபரை அழைத்ததாக தெரிகிறது. அந்தப் நபர் அவர் இருந்த இடத்திற்கு மூன்று மர்ம ஆசாமிகளுடன் காரில் வந்தார். இதைத் தொடர்ந்து சதீஷ் ராஜிடம் இருந்த பத்தாயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் அழைத்து சென்றனர். பிறகு அவரது ஏடிஎம் கார்டை பறித்து அதில் இருந்து மேலும் 30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு பஞ்சப்பூர் பெட்ரோல் பங்கில் காருக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு அவரிடம் இருந்த மேலும் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் அழைத்து வந்து பஞ்சபூர் அருகே இறக்கிவிட்டு சென்றனர்.இந்த சம்பவம் குறித்து எடமலை பட்டிப்புதூர் போலீசார் வழக்குப்பதிந்துரூபாய் 50 ஆயிரம் பணத்தை திருடி சென்ற நான்கு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!