Skip to content
Home » திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சக பயணிகள் சங்கமம் கூட்டம்….

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சக பயணிகள் சங்கமம் கூட்டம்….

  • by Senthil

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவில் சக பயணிகளின் சங்கமம் கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில், மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில துணைத்தலைவர் ஈரோடு கோவிந்தராஜ், சென்னை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வந்தவர்களை மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் திருச்சி கே.சி. நீலமேகம் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.. அவை
1.அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்க்காக 1993 முதல் பாதயாத்திரை, பொதுக் கூட்டம், கையெழுத்து இயக்கம் போன்ற விழிப்புணர்வுகளை மக்களிடம், அரசாங்களிடம் எடுத்துரைத்த டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியிற்கும், அதனை தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வெற்றி கண்ட கொங்கு மண்டல விவசாய சங்கம், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகளுக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டுகிறது.

2. தமிழக அரசு உடனே மக்களை பாதிக்கும் மது விற்பனை நேரத்தை மாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

3. காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைந்து விரிவுப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் எழுத்தாளர், சிந்தனையாளருமான, மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எழுத்தாலும், சிந்தனையாலும், செயலாலும், தொழிலும், பொது வாழ்விலும் உயர்ந்தவர்கள் பாராட்டுகளையும்,, நன்றிகளையும் தெரிவித்தார்கள்

நிகழ்விற்கு திருச்சி விருந்தோபல், சுற்றுலா அமைப்பு, நிர்வாகத் தலைவர் மு.பொன்னிளங்கோ, ஈரோடு சிவக்குமார், அத்தானி சீனிவாசன், மதுரை சந்திரசேகரன், தல்லாகுளம் முருகன், கோவை எஸ்.கே.பாபு, ஞானவேல், தஞ்சாவூர் முருகானந்தம், கரூர் சுகுமார், சதானந்தம், பாண்டிச்சேரி சுதாகர், சென்னை ஜெகதீசன், லட்சுமி நாராயணன், திருச்சி சண்முகசுந்தரம், விஜயகுமார், ஆர்.கே.ராஜா, விஜயகுமார், முருகதாஸ், இளங்கோ, குமரன், பெரம்பலூர் சிவக்குமார், தூத்துக்குடி கந்தசாமி, பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!