Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனதூண்டிவிட்டு கர்நாடகத்தில் போராட்டம் நடத்தும் பாஜகமற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழகத் துக்கு வழங்க வேண்டிய நீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழகஅரசு பலமுறை வலியுறுத்திய பின்பும் பாராமுகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசைக்கண்டித்தும், 100 நாள் வேலைதிட்ட நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் அக்.16-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில்  இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!