Skip to content
Home » பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

  • by Senthil

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் நகரப் பொறியாளர் திரு. சிவபாதம், மண்டல தலைவர்கள்,செயற் பொறியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ள  திருச்சி மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து  தயார் நிலையில் உள்ளது.   தொடர் கனமழை பெய்தால் திருச்சி  மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி , ராஜீவ் காந்தி நகர் , ஆதிநகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் , R.M.S. காலனி, கோரை ஆறு, சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால்பகுதிலிருந்து தண்ணீர்  குடியிருப்புகளுக்கு வராமல் தடுக்க புதிதாக தடுப்பு ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்  வந்தால் அதனை  உடனடியாக அகற்ற 20 எச்பி சக்திகொண்ட,  டீசல்

மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மேயர் மு. அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன’ மாநகராட்சி நகரப் பொறியாளர்   சிவபாதம், மண்டல தலைவர்கள்,செயற் பொறியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாக துறை  அமைச்சர் கே. என். நேரு உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை  மேயர் மு. அன்பழகன், மண்டல குழு தலைவர் மற்றும் அலுவலர்களுடன் பார்வையிட்டார். மழை அதிக அளவு பெய்தால் மழை நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக மேயர்  தெரிவித்தார். இந்த ஆய்வில் நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் துர்கா தேவி ,  விஜயலட்சுமி கண்ணன், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!