திருச்சி தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 செவ்வாய்கிழமை இன்று திருச்சி, டி.வி.எஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் “மத நல்லிணக்க உறுதிமொழி” நிகழ்வு நடைப்பெற்றது.
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் இந்து மத சைவ வைனவ குருக்கள் அர்ச்சகர்கள் கிராம கோவில் பூசாரிகள் கிறிஸ்தவ பாதிரியார்கள் இஸ்லாமிய இமாம்கள் உள்ளிட்டவர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்
இந்த நிகழ்வில் ,சேகரன் வன்னை அரங்கநாதன் செந்தில் – மாவட்ட – மாநகர நிர்வாகிகள் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்