Skip to content
Home » விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

  • by Senthil

திருச்சி விமான நிலைய முனைத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து  பிரதமர் மோடி இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார்.   தமிழில் வணக்கம் என்று எனது தமிழ்க்குடும்பமே என்றும் தமிழில் கூறினார்.  விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்போது தொடங்கி வைக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய்  திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்,  இந்த திட்டங்கள்  வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

கடந்த ஆண்டின் இறுதியில்  வெள்ளத்தால் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். அந்த மாதங்கள்  கடினமானதாக இருந்தது. பலரை  இழந்தோம். சொத்துக்களை இழந்தோம். பாதிக்கப்பட்ட மக்களை நிலை எனக்கு  தெரியும். சாத்தியமான அனைத்து உதவிகளையும் தமிழ் மக்களுக்கு அளித்து வருகிறோம்.  கேப்டன் விஜயகாந்த்தை சில நாட்களுக்கு முன் இழந்தோம். அவர் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் அவர் கேப்டனாக இருந்தார்.  தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் சினிமா மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டிருந்தார்.  அவரது இழப்பு சினிமாவுக்கும், அரசியலுக்கும் இழப்பு.

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனையும் நினைவு கூர்கிறேன். அவர் நமது நாட்டின் உணவு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றினார்.  சி. வி. ராமன் போன்றவர்களை இந்த தமிழ்நாடு உருவாக்கி உள்ளது.

என் தமிழ் குடும்ப உறவுகளே வர இருக்கும் 25  ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி என்றால் பொருளாதாரம், கலாச்சாரம் இரண்டும் இருக்க வேண்டும்.  இந்தியாவின் பிரதிபலிப்பு தான்  தமிழ்நாடு. வள்ளுவர், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட ஞானிகள்  பல படைப்புகளை, இலக்கியங்களை  தந்துள்ளனர். இந்த மண் அவர்களை உருவாக்கி உள்ளது.

எனவே தான் நான் தமிழ்நாடு வரும்போதெல்லாம்  நான் புதிய சக்தியை பெற்று செல்கிறேன்.  திருச்சி என்று சொன்னாலே  வளர்ச்சி  கொட்டிக்கொடுக்கிறது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள்  வார்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டேன். எனவே தான் நான் எங்கு சென்றாலும் தமிழ் பற்றி   பேசாமல் இருந்தது இல்லை.  தமிழ் கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற ஆசை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில்  இந்தியா வளர்ந்து உள்ளது.நவீன கட்டமைப்பில்  முதலீடு அதிகரித்து உள்ளது. இதன் ஆதாயம் தமிழ்நாட்டுக்கும் கிடைத்து வருகிறது.  மேக் இன் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது. உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

மத்திய அமைச்சர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் 400 முறை தமிழ்நாடு வந்து உள்ளனர்.  திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் காரணமாக  3 மடங்கு வளர்ச்சி அதிகரிக்கும்.  திருச்சியை தவிர  பக்கத்து நகரங்களிலும் முதலீடுகள்  அதிகரிக்கும். சுற்றுலா, கல்வி பலம்  கூட்டப்படும். 

தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி பெருகும். திருவரங்கம், மதுரை, ராமேஸ்வரம், சிதம்பரம் , மதுரை, வேலூர் போன்ற இடங்களை இணைக்கின்றன. இவை ஆன்மீகத்தின் புதிய மையங்கள்.

கடந்த 10 ஆண்டுகளில்  மத்திய அரசின் கவனம்  கடற்கரையோர முன்னேற்றம், மீனவர்களின் நலன் ஆகியவற்றுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மீன்வளத்துக்கு தனி  துறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு உதவி அளிக்கப்படுகிறது.  மீனவர்களுக்கு பல உதவிகள் கிடைத்து வருகிறது.  விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள்  கொடுக்கப்பட்டுள்ளது.

சாகர்மாலா திட்டத்தால் துறைமுகங்கள், நல்ல சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  காமராஜர் துறைமுகமும் சிறந்த துறைமுகமாக உருவாகி உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில்  மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடியை  மத்திய அரசு  அளித்து உள்ளது.   இரண்டரை மடங்கு அதிக நிதி அளித்து உள்ளது மத்திய அரசு.

லட்சகணக்கான குடும்பங்களுக்கு  மத்திய அரசின் ரேசன் அரிசி, கான்கிரீட் வசதிகள்,  எரிவாயு இணைப்புகள்  தமிழ் நாட்டுக்கு கொடுத்து வருகிறது.  தமிழ் இளைஞர்களின் மீது அமோகமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ் இளைஞர்களிடம் புதிய  எண்ணத்தை என்னால் காணமுடியாது.  அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. புதிய உற்சாகம் தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் சக்தியாக மாறும். உங்கள் அனைவருக்கும் மீண்டும். நல் வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!