திருச்சி மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் , விஜயா ஜெயராஜ், ராமதாஸ், எஸ்.விஜயலட்சுமி , நாகலட்சுமி நம்பி, பங்கஜம் மதிவாணன்,முத்துக்குமார், சோபியா விமலா ராணி. சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், சந்திரசேகர், வினோத், சகாயம்,நிர்வாக அலுவலர் துரை, உதவி வருவாய் அலுவலர் தாமோதரன், சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், பன்னீர்செல்வம், கண்காணிப்பாளர் சிராஜ் நிஷா, மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோ அபிசேகவுரம் கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்டுகளின் அடிப்படை தேவைகள், வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.