Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார் காடுவெட்டி சத்திய மூர்த்தி …

திருச்சி மாவட்டம், தொட்டியம்அடுத்த நாகையநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய நாச்சிப்பட்டியில் பல்வேறு பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்திய மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டிசத்யமூர்த்தியிடம் அப்பகுதி மக்கள் நீர்நிலை தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதால் மாற்றி தரவும் விநாயகர் கோவில் முதல் மயானம் வரை தார் சாலை அமைத்து தரவும் கடகால் வாய்க்காலில் சிறிய பாலம் அமைத்து தரவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை சம்பந்தப்பட்ட

துறை அதிகாரியுடன் கலந்து பேசி படிப்படியாக நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் ஒன்றியகுழு உறுப்பினர் தீபா செல்லத்துரை பெரியநாச்சிபட்டி கரட்டுப்பட்டி வார்டு குமார் உறுப்பினர் பணித்தள பொறுப்பாளர் சாந்தி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!