Skip to content
Home » திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலுபொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி சர்வதேச விமான நிலைய பொது மேலாளர் செல்வகுமார் தொடங்கிவைத்தார்.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், துர்கை, சிவன், விநாயகர் , முருகர் , பெருமாள் , கிருஷ்ணர் உரியடிக்கும் செட், கடோத்கஜன் கொலு செட்டுகள்,

கல்யாண செட், பள்ளி கூடம் செட், டீ கடை, ஐஸ் கடை செட் , கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என 25 ருபாய் முதல் 25000 ரூபாய் வரை கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது இந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!