Skip to content
Home » திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முசிறி தாப்பேட்டை தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக பதவி ஏற்ற மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினை தெரிவித்தனர்.புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் 10 தீர்மானங்களை வாசித்தார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.மறைந்த கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பகுதியில் கல்வெட்டு கொடிக்கம்பம் கட்டாயம் நிறுவ வேண்டும். தீவிர

உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய நகர கிளைக் கழகம் வரை ஆய்வுகூட்டம் ஒன்றிய அணி நிர்வாகிகளை நியமனம் செய்திட வேண்டும்.மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிட்டு மாதம் ஒரு ஒன்றிய கழகம் விகிதம் தலைமை கழகத்தின் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கேப்டன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆறுகளில் கொள்ளை போகும் மணல் திருட்டு மற்றும் மணல் அல்ல தடை விதிக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை நிறுத்திடவும் நாடு முழுவதும் ஏற்படும் மின் தடை சரி செய்து தடை இல்லாமல் மின்சாரம் வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை சரி செய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 திருமணங்கள் நிறைவேற்றி பேசினார். முன்னதாக தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் தொட்டியம் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மேஸ்திரி மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் முருகேசன் பொருளாளர் ஆறுமுகம் மாவட்ட துணை செயலாளர்கள் சடகோபன். சிவக்குமார் . மகாமுனி பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகவேல் துறை சதீஷ்குமார் பார்த்திபன் மற்றும் முசிறி நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் விஜயசேகரன் செல்லதுரை ஜெயராமன் பாக்கியராஜ் சிவமணி தங்கமணி பேரூர்செயலாளர்கள் அர்ஜுனன் மகாமுனி தர்மராஜ் மற்றும் தேமுதிக திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொட்டியம் தாப்பேட்டை காட்டுப்புத்தூர் முசிறி மன்னச்சநல்லூர் துறையூர் லால்குடி உப்பிலியாபுரம் உள்ளிட்ட பகுதி நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!