Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் தலா ரூ 300 க்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் ரோந்து சென்ற பொழுது திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த புதின்ராஜ் (20), வடக்கு காட்டூர் அண்ணா நகர் சேர்ந்த ஜெகன் (22) ஆகிய இருவரும் போதை மாத்திரை மற்றும் ஊசியை விற்றுக் கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக இருவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!