திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை எம்எல்ஏ கதிரவன் நேற்று திறந்து வைத்தார். பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில்
2021-2022 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்
திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணை பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.