Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசுகிறவர்கள் மீது  சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது சென்னை, மதுரை திருநகர் உள்பட பல இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்  நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். மன்னிப்பை ஏற்க மாட்டோம். அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என  சம்பந்தப்பட்டவர்கள் கூறி விட்டனர். இந்த நிலையில்,  இன்று திருச்சியை சேர்ந்த ரெட்டி நலச் சங்கத் தலைவர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில்  திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார்  கஸ்தூரி மீது 3 பிரிவுகளில்   வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் தமிழ்நாடு வருவாய்த்துறை  அலுவலர் சங்கத்தினரும் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அரசு ஊழியர்களை இழிவுபடுத்தி அவர் பேசி உள்ளார். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!