Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி


திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40) இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி இவரது முகநூல் பக்கத்தில் கௌஷிக் கேத்தாராம் என்ற பெயர் கொண்ட நபர் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு தன்னை அறிமுகம் செய்தார்
இதைத்தொடர்ந்து மற்றொரு நபர் வாட்ஆப் காலில் அவரை தொடர்பு கொண்டார்.
பின்னர் அவர் ஒரு செயலியை டவுன்லோடு செய்து கொள்ளும் படியும், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 200 சதவீத லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய வினோத் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்கில், தன்னுடைய வங்கி கணக்கில் இருந்தும் தனக்கு தெரிந்த நண்பர்கள் வங்கி கணக்கில் இருந்தும் மார்ச் 12ஆம் தேதி முதல் கடந்த
மே 8ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளாக ரூ. 7 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை வைத்தனர்.
பின்னர் அவருக்கு லாபத்தொகை வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் அந்த மோசடி பேர்வழிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தார்
ஆனால் அந்த செல்போன் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட வினோத் இது தொடர்பாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலமாக புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!