Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

 

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர் அரங்கநாதன், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக திருச்சி தில்லைநகர் உறையூர் ஆகிய பகுதிகளில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உறையூர் மிஷன் மருத்துவமனை அருகில்
இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு
தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் உறையூர் தாத்தையாங்கார் ரோடை சேர்ந்த பாபு (வயது 45) என்பவர் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது இதையடுத்து ஷாஜகானை போலீசார் பிடித்து அவர் வாகனத்தையும்
பதுக்கி வைத்திருந்த சாக்கு முட்டையில் கடத்தி வந்த 1,800 கிலோ ரேஷன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் பாபு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவல் உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!