வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு
வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்ததால் காதலன் ஆத்திரம்
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை வடகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் பாஸ்கர் (23). இவருக்கும் சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடமாக இரண்டு பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இதனை அறிந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் அவசர அவசரமாக சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த பாஸ்கர் கடும் அதிர்ச்சடைந்தார். பின்னர் அரிவாளுடன் சோமரசம்பேட்டையில் உள்ள காதலி வீட்டுக்கு சென்றார் .பின்னர் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த காதலியிடம் என்னை ஏன் ஏமாற்றினாய் என கேட்டு தகராறு செய்தார். அப்போது பெற்றோரின் வற்புறுத்தலுக்கு பணிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆத்திரம் தீராத பாஸ்கர் காதலியை ச அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதில் அந்த இளம் பெண்ணுக்கு தலை இடது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம் பேட்டை போலீசார் பாஸ்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். வேறு இடத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்து காதலியை காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
