Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

திருச்சி மாவட்டம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தொடங்கி வைத்து

பார்வையிட்டு, வெறிநோய் குறித்து விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, ஊராட்சிமன்றத் தலைவர் தாமோதரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். எஸ்தர்ஷீலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!