Skip to content

தமிழகத்தை காக்கும் கவசமாக திமுக இருக்கும்…. திருச்சி சிவா ….

  • by Authour

மாநிலங்களவை தி.மு.க குழுத்தலைவர் திருச்சி சிவா எம்.பி., கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் பொறுப்புடன் இருக்கும் கட்சி திமுக. 25 ஆண்டுகள் கழித்து குடிக்க நீரோ, சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்குமா என்பது தெரியாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காற்று மாசுபடுவதை தடுக்கவும், தண்ணீரை சேமிக்கவும் கற்று கொடுங்கள். கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகன் இருந்த இடத்தில் மு.க.ஸ்டாலின்‌ உள்ளார். பொதுக்கூட்டத்தில் சால்வை வழங்குவதை நிறுத்துங்கள். இது எதற்கும் பயனளிக்காது. கைத்தறி ஆடைகளை வழங்கினால் கைத்தறி விவசாயிகள் பயன் பெறுவார்கள். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க கேட்ட அவகாசம் 5 ஆண்டுகள். ஆனால் இதில் தற்போதே 75 சதவீதம் செய்து முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

கொரோனா காலத்தில் இரக்கமற்ற அரசாக திகழ்ந்தது அ.தி.மு.க. ஆனால் கொரோனா காலத்தில் தி.மு.க சார்பில் செல் நம்பர் மூலம் மக்கள் குறைகளை தீர்த்தவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தை யார் தாக்க வந்தாலும் அதனை தடுக்கும் கவசமாக திமுக செயல்படும். 2-வது முறை பாஜக ஆட்சிக்கு வந்தது வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் அல்ல. எதிர் கட்சிகள் சிதறி கிடந்ததால் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *