Skip to content
Home » திருச்சி SRM கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல்- உயர்கல்வி கலந்தாய்வுக்கான விழிப்புணர்வு..

திருச்சி SRM கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல்- உயர்கல்வி கலந்தாய்வுக்கான விழிப்புணர்வு..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் உள்ள எஸ். ஆர். எம். டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி கலந்தாய்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ் ஆர் எம் டி ஆர் பி பொறியல் கல்லூரி சார்பாக தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி கலந்தாய்வுக்கான விழிப்புணர்வு

நிகழ்ச்சி திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது் இதில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் முதலில் நிறுவணம் பற்றிய சுருக்கமான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. எஸ் ஆர் எம் டிஆர்பி பொறியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கணேஷ் பாபு வரவேற்புரை வழங்கினார் எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமை உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மால்முருகன் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தொழில் ஆலோசகர் மற்றும் பகுப்பாய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தி உயர் கல்வியின் முக்கியத்துவத்தையும் வருங்கால வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் டெக்னாலஜி, சென்சார்கள், செமி கண்டக்டர்கள் போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்தும் விளக்கினார். மேலும் வினாத்தாளின் முறை மற்றும் அதை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பது பற்றி ஆலோசனைகளையும் வழங்கினார். ஜெர்மன், ஜப்பானியம் போன்ற பிற மொழிகளை கற்றுக் கொள்வதின் தேவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மீன்வளம், இயற்கை மருத்துவம், பிகாம், வங்கிக்கான ஏ1 கருவிகளுடன் கூடிய பொருளாதாரம் பிளாக் செயின் குறித்த அறிமுகத்தையும் ஆலோசனைகளையும் வழங்கினார் உலகம் முழுவதும் நல்ல வாய்ப்புள்ள ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஜே இ இ, நாட்டா, நிஃப்ட், யூசீடு கிளாட் மற்றும் சியுஇடி போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் ஏன் தேர்ச்சி பெற வேண்டும். சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் அதை எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும்,
அதன் கண்காணிப்பு அமைப்பு குறித்து அவர் விழிப்புணர்வு வழங்கினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 800க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக டிஆர்பி பொறியல் கல்லூரி தொழில் தொடர்பு இணை இயக்குனர் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!