Skip to content
Home » பராமரிப்பு பணி… திருச்சியில் இன்று பெரும்பாலான ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி… திருச்சியில் இன்று பெரும்பாலான ரயில்கள் ரத்து

  • by Senthil

 

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரெயில்கள் வந்து செல்லும் போது ரெயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு ரெயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக

திருச்சி ரயில்வே சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த 20-ந்தேதி முதல் இண்டர்லாக்கிங் (பராமரிப்பு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன்காரணமாக நேற்று  பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் 5 மணிநேரம் தாமதமாக வந்து சென்றன.

 இந்த பணிகள் தற்போது பொன்மலை அருகே திருச்சி-சென்னை வழிதடத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.  இதனால் திருச்சி கோட்டத்தில் இன்று (செவ்வாய்)16 ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் வருமாறு:

 

ரயில் எண். 16849 – திருச்சிராப்பள்ளி – ராமநாதபுரம் வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1, 2023 ,காலை 07.05 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்படும்.

  • ரயில் எண். 06611 திருச்சிராப்பள்ளி – ஈரோடு வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். காலை 07.00 மணிக்கு, ஆகஸ்ட் 1, 2023 , முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • ரயில் எண். 06870 திருச்சிராப்பள்ளி – தஞ்சாவூர் ,வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். ஆகஸ்ட் 1, 2023 காலை 08.35 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • ரயில் எண். 06874 தஞ்சாவூர் – மயிலாடுதுறை வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். ஆகஸ்ட் 1, 2023, காலை 10.05 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • ரயில் எண். 06694 மயிலாடுதுறை – விழுப்புரம் வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். ஆகஸ்ட் 1, 2023 மாலை 06.05 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • ரயில் எண். 06490 திருச்சிராப்பள்ளி – காரைக்கால் டெமு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில். ஆகஸ்ட் 1, 2023 காலை 6.40 மணி, அதேபோல் தஞ்சாவூர் – திருச்சிராப்பள்ளி இடையே முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ரயில் எண். 06881 திருச்சிராப்பள்ளி – கரூர் வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். ஆகஸ்ட் 1, 2023 காலை 09.45 மணிக்கு முழுமையாக ரத்து செய்யபடுகிறது.
  • மேலும் , ரயில் எண் 06882 கரூர் – திருச்சிராப்பள்ளி கரூரில் இருந்த புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். பிற்பகல் 03.55 மணிக்கு, ஆகஸ்ட் 1, 2023 முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • ரயில் எண். 06123 திருச்சிராப்பள்ளி – கரூர் திருச்சியில் இருந்து புறப்படும் டெமு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். ஆகஸ்ட் 1, 2023 மாலை 06.20 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • ரயில் எண். 06124 கரூர் – திருச்சிராப்பள்ளி DEMU முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ஆகஸ்ட் 1, 2023 & 02 ஆம் தேதிகளில் காலை 07.20 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • திருச்சி கோட்டத்தின் கேஸில் ராக் – காரஞ்சோல் ரயில் நிலையம் இடையே நிலச்சரிவு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் சேவைகளின் வடிவத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
  • ரயில் எண். 17315 வாஸ்கோடா-காமா- வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் வாஸ்கோ-டா-விலிருந்து புறப்படுகிறது. ஜூலை 31, 2023 அன்று காலை 09.00 மணிக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
  • ரயில் எண். 17316 வேளாங்கண்ணி – வாஸ்கோ-ட-காமா வாராந்திர எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணியிலிருந்து புறப்படுகிறது. இரவு 11.55 மணிக்கு ஆகஸ்டு 01, 2023 அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!