நடிகை நயன்தாராவின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனுடன், “எதிர்காலத்தில் இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை இணைந்து ரசிக்க வாழ்த்துகள்” என அன்புடன் குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்தப் பதிவு இருவருக்கும் இடையிலான நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.
நடிகை நயன்தாராவுக்கு திரிஷா பிறந்தநாள் வாழ்த்து
