Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழாவை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகிலும், ஏவிஎம் கார்னர் ஆகிய இடங்களில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்று விழா நடந்தது.மதியழகன்  கொடியேற்றி வைத்து  இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி, கொடியேற்று விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!