திருச்சி விமான நிலையத்தில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் பேட்டி …….
அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து
திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் …….
பட்ஜெட் தாக்கலின் போது பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலையையும் அதோடு சேர்த்து எடுத்து வந்தது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அரசமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது.
மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசமைப்பு சட்டம் தான் மத நம்பிக்கையையும் அங்கீகரிக்கிறது. அரசமைப்பு சட்டத்தில் உள்ள இந்த முரண்பாட்டை பெரியார் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அம்பேத்கர், பன்மைத்துவத்தை போற்ற இது அவசியம் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இன்றைய பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட் ஆகத்தான் இருக்கும் என கருதுகிறேன் பட்ஜெட் முழுமையாக வாசித்த பின்பு தான் அது தெரியும் ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு மாதத்தில் அவர்களால் புதிய திட்டங்களை செயல்படுத்தி பற்றாக்குறையை சரி செய்ய முடியாது.
உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை தொடர் விவாதத்திற்கு உட்படுத்த தேவையில்லை. அது நேற்றோடு முடிந்துவிட்டது.
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தேவை. பெங்களூருக்கு தேவையான நீரை கிருஷ்ணசாகர் அணையில் இருந்து பெற முடியும் என்கிற போதும் மேகதாது அணையை கட்டியை தீருவோம் என கர்நாடக அரசு தெரிவிக்கிறது ஒன்றிலிருந்து கர்நாடக மாநில அரசியல்வாதிகளின் அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் தமிழக அரசு கௌரவம் பார்த்து வறட்டு பிடிவாதம் பிடிக்க தேவையில்லை.
எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் தமிழர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்த வேண்டும் இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தெரிவித்தார்.
