Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் பங்கேற்கும் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா… திருமா புறக்கணிப்பு..

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் வரும் 6-ம் தேதி சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. அதாவது விஜய் புத்தகத்தை வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என்றும் கூறப்பட்டது.  இது தொடர்பாக திருமாவளவனும் கூறியிருந்தார். ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் முடிவை திருமாளவன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் விஜயுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தேவையற்ற யூகங்களுக்கு வழி ஏற்படுத்தும் என்பதால் திருமா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் நூலை வெளியிட முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்வார் எனத்தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!