Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது

அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் வந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த குணா ஆரோக்கியம் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதே போல் கல்பாளையம் பொது கழிவறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த மணிரத்தினம் (26) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ரூபாய் 1900 செய்யப்பட்டது.

டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

திருச்சி துவாக்குடி குட்டி மலை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 65). இவர் சம்பவத்தன்று தஞ்சாவூர் திருச்சி மெயின் ரோட்டை கடப்பதற்காக பால் பண்ணை லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே கடக்க முயன்றுள்ளார். அப்போதுஅடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று கோபாலகிருஷ்ணனின் மீது மோதியது. இதில்நிலைத்திடுமாறு கீழே விழுந்த கோபாலகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பெயரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே ஊழியர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாவு

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( 48). இவர் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு ரயில்வே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுண குமாரி (வயது 42). இவரது வீட்டில் முபாரக் என்பவர் வாடகை அடிப்படையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முபாரக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுகுணகுமாரி முபாரக்கிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முபாரக், சுகுணகுமாரியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

திருச்சி விமான நிலையம் திலகர் தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (67 ). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (38) என்பவர் பஞ்சவர்ணத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.இதில் காயம் அடைந்த பஞ்சவர்ணத்தை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விமான நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

வாலிபர் மீது தாக்குதல் – 3 பேர் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை மேலப்புதூர் கூனி பஜார் பகுதி சேர்ந்தவர் பிரதாப் (வயது 24). இவர்ஒரு தனியார் நெட்வொர்க் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காஜா மலை பகுதி சேர்ந்த ஸ்ரீனிவாசன் ( 32 ) என்பவர் நெட்வொர்க் இணைப்பை பெறுவதற்காக பிரதாப்பை செல்போன் மூலம் அழைத்துள்ளார். இந்த அழைப்பை பிரதாப் ஏற்க மறுத்து உள்ளார். சம்பவத்தன்று பிரதாப் மற்றும் அவருடன் வேலை செய்யும் ஆசிக் அலி என்பவருடன் ஸ்ரீனிவாசன் வீட்டிற்கு நெட்வொர்க் இணைப்பை செய்வதற்காக சென்று உள்ளனர். அப்போது ஸ்ரீனிவாசன் மற்றும் அவர்களது நண்பர்களான கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த வினீத் குமார் 32, ஜேகே நகரை சேர்ந்த பாரதி 26 ஆகிய மூவரும் பிரதாப்யை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த பிரதாப்யை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!