நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் சாமி கும்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் டால்டன் (70), நிக்கோலஸ் (65) என்ற சகோதரர்கள் இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட செந்தில் என்பவரை போலீசார் கைது செய்தனர். மோதலின் போது செந்திலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் போலீஸ் காவலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2 சகோதரர்கள் குத்திக் கொலை.. நெல்லையில் பரபரப்பு
